Subiksha Raman

Currently pursuing her GCE Advanced Level (A-Level) at Raffles Institution, Subiksha is a passionate and ardent reader of Tamil literature. Her interest was sparked at a young age by her very own grandmother who taught Tamil, and she has gone on to win prizes at the Kavimalai Poetry Competition and the National Poetry Competition.
Don’t miss the recitation of Subiksha’s poem as part of Sollum Swaramum on 17 Mar, Sat at 8pm.
வலி
சுபிக் ஷா ராமன்
இதயக்கதவின் பூட்டு உடைந்து
இன்னல் பெருக்கெடுத்து ஓடுகிறது - ஆனால்
தொண்டைக்குழியில் மாட்டிக்கொண்டு
வெளிவரத் தயங்குகின்றன வார்த்தைகள்.
அழுது அழுது விழிகளில் தேங்கியிருந்த
கண்ணீர் வெள்ளம் வறண்டு போய்விட்டது.
ஆனால் உள்ளத்தில் தோன்றியுள்ள பிளவுக்கு
பசைபோட்டு வலி தீர எங்கே செல்வேன்?
வாழ்ந்தபோதெல்லாம்
மனத்தைச் சுட்ட வார்த்தைகளையே எண்ணிப்பார்த்து
வாழ்வின் எல்லையில் மட்டும்
மனத்தைத் தொட்ட வார்த்தைக்களை எண்ணிப்பார்த்து
குற்ற உணர்வால் குமுறுகிறேன்
உறவின் வாழ்வு முற்றுப்புள்ளியானதும்
எனது வாழ்வு கேள்விக்குறியாய் மாறியது.
இனிமேலும் வாழ்வெனும் மைதானத்தில்
விதியின் பாதத்தால் உதைபடும்
பந்தாய் இருப்பதைத் தவிர
வேறு வழி என்ன உள்ளது?
Pain
Subiksha Raman
The lock of the door to my heart breaks
And sorrow comes pouring out - But
Words get stuck in the depths of my throat
And refuse to fall from my lips
All the puddles of tears welled up in my eyes
Have dried up from the ceaseless crying.
Now what will I use to glue back
The broken pieces of my heart together?
While I lived
I thought about the words that pierced my heart
But only at the brink of death do I think
About the words that touched my heart
And I cower in guilt
Once the lives of my loved ones became a full stop,
Mine became a question mark.
Even after this, what else can I do,
But become a ball that is kicked
In the stadium of life
By the feet of fate?